Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சீனு ராமசாமி – ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகர்

famous actor joined Seenu Ramasamy - GV Prakash film

பரத் நடித்த கூடல்நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. இதையடுத்து இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் தேசிய விருது பெற்றது. பின்னர் நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் இயக்கத்தில் உருவாகி உள்ள மாமனிதன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக இயக்கி வரும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் சௌந்தரராஜா இப்படத்தில் இணைந்திருக்கிறார். இவர் ஏற்கனவே சீனு ராமசாமி இயக்கிய தர்மதுரை படத்தில் நடித்திருந்தார். மேலும் சௌந்தரராஜா, சுந்தர பாண்டியன், கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில், ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.