Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கடினமான காலம் உன்னை வலிமையாக்கும் – ஷாருக்கான் மகனுக்கு ஆறுதல் கூறிய பிரபல நடிகர்

famous actor offered his condolences to Shah Rukh Khan son

மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்துவதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானும் ஒருவர் ஆவார்.

ஷாருக்கானின் மகனுக்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்களான திரைப்பட தயாரிப்பாளர் ஹன்சல் மேத்தா, நடிகர்கள் பூஜா பட் மற்றும் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கருத்து தெரிவித்து உள்ளனர். தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், சமூக வலைத்தள பக்கத்தில் ஆர்யனுக்கு ஆறுதலாக ஒரு கடிதம் வெளியிட்டு உள்ளார்.

அதில், என் அன்பான ஆரியன், வாழ்க்கை ஒரு விசித்திரமான பயணம். இது நிச்சயமற்றது என்பதால் அது சிறந்ததாக உள்ளது. அது உங்களுக்கு அனுபவங்களை கொடுக்கிறது. ஆனால் கடவுள் கனிவானவர். அவர் விளையாடுவதற்கு கடினமான பந்துகளை மட்டுமே கொடுக்கிறார்.

குழப்பங்களுக்கு மத்தியில் நீங்கள் உங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான அழுத்தத்தை உணரும்போது நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆர்யன் தனது கோபம், குழப்பம், உதவியற்ற தன்மை ஆகியவற்றை அப்படியே தன்னுள் இருக்க அனுமதிக்க வேண்டும். கடினமான காலங்கள் உன்னை வலிமையாக்கும் என கூறி உள்ளார்.