Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல நடிகை தற்கொலை முயற்சி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Katta Mythili

தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவர் நடிகை கட்டா மைதிலி. இவர், பிரீசர் எனப்படும் ரம் வகையை சேர்ந்த மதுபானம் 8 பாட்டில்கள் மற்றும் தூக்க மாத்திரைகளை ஒரே நேரத்தில் எடுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுபற்றிய தகவல் பஞ்ஜகுட்டா காவல் நிலையத்திற்கு நேற்று சென்றது. இதனை தொடர்ந்து மைதிலியின் தொலைபேசி சிக்னலை வைத்து அவரது வீடு இருக்கும் பகுதியை கண்டறிந்து உடனடியாக போலீசார் வீட்டுக்கு சென்றனர். வீட்டில் மைதிலி சுயநினைவற்ற நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி பஞ்ஜகுட்டா காவல் நிலையத்தில் தனது கணவர் ஸ்ரீதர் ரெட்டி மற்றும் 4 பேருக்கு எதிராக துன்புறுத்தல் புகார் அளித்து உள்ளார். இந்த வழக்கில் முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளது. இதேபோன்று சூரியபேட்டை மாவட்டத்தில் உள்ள மோத்தி காவல் நிலையத்திலும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக கட்டா மைதிலி புகார் அளித்து உள்ளார். வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், நடிகை மைதிலி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.