வாரிசு நடிகைகள் பலர் ஏற்கனவே பிரபல கதாநாயகிகளாக வலம் வருகின்றனர். கமல்ஹாசன் மகள் சுருதிஹாசன் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இன்னொரு மகள் அக்ஷரா ஹாசனும் படங்களில் நடிக்கிறார்.
நடிகை மேனகா மகள் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை லிசியின் மகள் கல்யாணியும் நடிக்க வந்துள்ளார். நடிகை ராதாவின் மகள்கள் கார்த்திகா, துளசி ஆகியோரும் கதாநாயகியாக நடித்துள்ளனர். மறைந்த ஶ்ரீதேவி மகள் ஜான்வி இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
இந்த வரிசையில் நட்சத்திர தம்பதிகளான ஜீவிதா, ராஜசேகரின் இளைய மகள் சுவாத்மிகாவும் கதாநாயகியாகிறார். நந்தா பெரியசாமி இயக்கும் புதிய தமிழ் படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடிக்கிறார்.
இந்த படத்தில் சேரனும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். கார்த்திக் நடித்த வருஷம் 16 படம் சாயலில் இந்த படம் தயாராக உள்ளது. படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.