Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தலைகீழாக தொங்கும் பிரபல நடிகை… குவியும் லைக்குகள்

Famous actress hanging upside down

பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தினமும் கவர்ச்சி மற்றும் கலர்புல்லான புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் ஷிவானி, தற்போது வித்தியாசமாக ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக தலைகீழாய் தொங்கிக்கொண்டு ஷிவானி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் ரசிகர்கள் ஏராளமான லைக்குகளை குவித்து சிங்கப்பெண்ணே… என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.