அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி உள்ளது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை ஹூமா குரேஷியிடம் சமீபத்தில் சில கேள்விகள் கேட்டகப்பட்டது. அப்போது ஒருவர் வலிமை படத்தில் அஜித்திற்கு இணையாக பைக் ஓட்டினீர்களா என்று கேட்டதற்கு, “நான் படத்தில் நடிப்பதற்காக கற்றுக்கொண்டேன். ” அஜித் சார் பைக் ஓட்டுவதில் கில்லாடி. அவர் எனக்கு பைக் ஓட்டுவதற்கான சில டிப்ஸ்கள் சொல்லிக்கொடுத்தார் என்று கூறியுள்ளார்.