Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஷங்கரின் அடுத்த 2 படங்களில் ஹீரோயினாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை?

famous Bollywood actress to play the heroine in Shankar's next 2 films

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வந்த படம் ‘இந்தியன் 2’. படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கடந்தாண்டு நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது வரை தொடங்கப்படவில்லை. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கமலின் தேர்தல் பணி காரணமாக அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள ஷங்கர், அடுத்த படம் இயக்க தயாராகி வருகிறார்.

அதன்படி இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்க உள்ளார். அதேபோல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து ஒரு படம் இயக்கவும் ஒப்பந்தமாகி உள்ளாராம். இது அந்நியன் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த இரண்டு படங்களுக்கும் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.