ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ஒன்றில் நாயகனாக சதீஷ் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஹீரோவாகி உள்ள சதீஷ்க்கு திரையுலகினர் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில், தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் யார்க்கர் கிங் நடராஜனும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘சதீஷ் அண்ணா உங்களுடைய புதிய படத்திற்கு எனது வாழ்த்துக்கள்’ என்று அவர் வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.