Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி விஜயின் படத்தை தயாரிக்கும் தோனி..!! எப்போது தெரியுமா.??

famous cricketer produced to thalapathy vijay movie

கோலிவுட் திரை உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்பவர்தான் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமன் இசையில் உருவாகும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கம் இருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்ததை தொடர்ந்து தற்போது விஜயின் புதிய படத்தை பிரபல கிரிக்கெட் வீரர் தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அவர்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தோனி என்டர்டெயின்மென்ட் லிமிட்டெட் தயாரிப்பு நிறுவனத்தில் நடிகர் விஜயின் திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிலும் தோனி அவர்கள் 7 என்ற என் தனக்கு ராசியானது என கருதுவதால், விஜயின் 70 ஆவது திரைப்படத்தை தயாரிக்கப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஜயை தொடர்ந்து தோனி அவர்கள் மகேஷ் பாபு, சுதீப் உள்ளிட்டோரின் படங்களையும் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

famous cricketer produced to thalapathy vijay movie
famous cricketer produced to thalapathy vijay movie