Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

துணிவு படத்தை பாராட்டிய பிரபல இயக்குனர்.! வைரலாகும் பதிவு

famous director tweet about thunivu movie update

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பொன்ராம். இவர் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வருவதற்கு பெற்றிருந்தது. இவற்றைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான DSP திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இந்நிலையில் இயக்குனர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்து வரும் துணிவு திரைப்படம் குறித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், துணிவு செம்மையா இருக்கு, அஜித் குமார் சார் பர்ஃபார்மன்ஸ் வேற லெவல். எச். வினோத் ஸ்கேம் கான்செப்ட் சூப்பரா இருக்கு. இது மக்களுக்கான விழிப்புணர்வு படம்னு சொல்லலாம். வாழ்த்துக்கள் துணிவு படக்குழு என்று பதிவிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.