Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஸ்ரேயா பந்தா இல்லாத நடிகை – பிரபல இயக்குனர் புகழாரம்

Famous Directors Praise Shriya Saran

மதுர, அரசாங்கம், மோகினி, மிரட்டல் ஆகிய படங்களை இயக்கிய மாதேஷ், இப்போது ‘சண்டக்காரி’ படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த படத்தில், ஸ்ரேயா கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகர் விமல் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் தேவ் கில் வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில், ‘சண்டக்காரி’ படத்தில் நடிகை ஸ்ரேயாவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து இயக்குனர் மாதேஷ் கூறியதாவது: “மும்பை கதாநாயகிகள் என்றாலே பந்தா பண்ணுவார்கள். தாமதமாக வருவார்கள். பாதுகாப்பு படையுடன் வருவார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறேன். என் கதைக்கு ஸ்ரேயா பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்ய சென்றேன்.

உள்ளுக்குள் பயம் இருந்தது. ஆனால் நான் பயப்பட்ட மாதிரி ஸ்ரேயா இல்லை. பந்தாவும் இல்லை. பாதுகாப்பு படையும் கேட்கவில்லை. சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து விடுவார். எந்த தொல்லையும் கிடையாது. அவருக்கு படப்பிடிப்பு முடிந்து விட்டாலும், ‘செட்’டை விட்டுப்போகமாட்டார். மற்ற நடிகர்கள் நடிப்பதை பார்த்துக்கொண்டிருப்பார்’’ என்றார் மாதேஷ்.