தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருக்கும் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அஜித் மற்றும் விஜய் இருவரும் இணைந்து நேருக்கு நேர் என்ற படத்தில் நடித்திருந்தனர்.
அதன் பிறகு எந்த ஒரு படத்திலும் இணையாத இவர்களை ஒரு படத்தில் இணைந்து நடிக்க வைக்க பலர் முயற்சி செய்து வருகின்றனர். வெங்கட் பிரபு நிச்சயம் அஜித் மற்றும் விஜய் இருவரையும் சேர்த்து ஒரு படத்தை இயக்குவேன் என கூறி வருகிறார்.
இப்படியான நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அஜித் மற்றும் விஜய் இணைவது ரொம்ப கஷ்டம் விஜய் துணிச்சலாக ஒப்புக் கொள்வார் ஆனால் அஜித் அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார். காரணம் விஜய் மக்களை சந்திப்பவர். அனைவரிடமும் எளிதாக பேசுபவர். ஆனால் அஜித் அப்படி இல்லை யாரிடமும் அவ்வளவு எளிதாக பேச மாட்டார் ரசிகர்களை சந்திக்க மாட்டார். ஆகையால் விஜயுடன் இணைவதை அவ்வளவு எளிதில் அவர் ஒப்புக் கொள்ள மாட்டார் என தெரிவித்துள்ளார்.
