மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை அமலாபால். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உருவெடுத்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழியுலகில் முன்னணி நட்சத்திரங்களின் ஜோடியாக இணைந்து அனைவரின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார்.
பிறகு மலையாளத்தில் பிரித்திவிராஜ் உடன் இணைந்து நடித்துள்ள ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்தார். தமிழில் அமலாபால் நடிப்பில் திரில்லர் படங்களாக தயாராகியுள்ள ’அதோ அந்த பறவை போல’ மற்றும் ’கடாவர்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.
இதனைதொடர்ந்து முதல்முறையாக பாலிவுட்டில் களமிறங்கி இருக்கிறார் அமலாபால். இவரது நடிப்பில் புதிய வெப்சீரிஸ் ஒன்று தயாராகி வெளிவரவுள்ளது. 1980களில் பிரபலமான பாலிவுட் நடிகையான பர்வீன் பாபியை மையப்படுத்தி உருவாகியுள்ள ரஞ்சிஷ் ஹி சஹி வெப் சீரிஸில் பர்வீன் பாபி என்ற கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்துள்ளார்.
மகேஷ் பட் உருவாக்கியுள்ள இந்த வெப்சீரிஸில் தாஹிர் ராஜ் பாசின், அம்ரிதா பூரி மற்றும் பல முன்னணி கதாபாத்திரங்கள் இதில் நடிக்கின்றனர். புஷ்படீப் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸை ஜியோ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. நேரடியாக இந்த வெப்சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
It’s time to go back to the 70s Bollywood and witness a dramatic love story with #RanjishHiSahi, coming soon on @VootSelect.
Created by @MaheshNBhatt
(1/2) pic.twitter.com/RjqweyMWu2
— Amala Paul ⭐️ (@Amala_ams) December 27, 2021