Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஷ்ணு விஷாலை தொடர்ந்து அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட விஜய் டிவி பிரபலம்..

famous-vijay-tv-sarath-viral-photo

கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னணி பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். அப்புகைப்படம் வைரலானதை தொடர்ந்து அவர் மீது எதிர்ப்புகளும் கிளம்பியது. அவரது இந்த நிர்வாண புகைப்படத்தின் சர்ச்சை முடிவதற்கு முன்பே தமிழ் நடிகரான விஷ்ணு விஷால் பெட்ரூமில் நிர்வாணமாக படுத்தபடி போஸ் கொடுத்து எடுத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

மேலும் அவர் அந்த புகைப்படத்தை அவரது மனைவி ஜுவாலா கட்டா தான் எடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் ரன்வீர் சிங்கிற்கு ஆதரவாக இவ்வாறு போஸ் கொடுத்ததாக விஷ்ணு விஷால் தெரிவித்திருந்தார். இவர்களது இந்த புகைப்படத்தோட பரபரப்பு இன்னும் முடிவடையாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரபலம் இணைந்திருக்கிறார். அதாவது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமான சரத், விஷ்ணு விஷால் போல் பெட்ரூமில் படுத்தபடி நிர்வாண போஸ் கொடுத்து அதனை தனது instagram பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

மேலும் அந்த புகைப்படத்தை குக் வித் கோமாளி பாலா தான் எடுத்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இவரது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முதலில் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று நினைத்துக் கொண்டு கமெண்ட் செய்தனர். அதற்கு பின்பு தான் அனைவருக்கும் தெரிய வந்தது அவர் நிர்வாண சேலஞ்சியை ஏற்று இருக்கிறார் என்று தெரியவந்த நிதிசன்கள் சரத்தை மனதில் விஷ்ணு விஷால் என்ற நினைப்பா என்று விளாசி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Sarath_offl (@sarath_kpy)