தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் கைதி. இந்த படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து விரைவில் இரண்டாவது பாகம் வெளியாக உள்ளது.
இதற்கான படப்பிடிப்புகள் வெகுவிரைவில் தொடங்கப்பட உள்ளன. கைதி 2 படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இருவரும் வெறித்தனமான லுக்கில் இருக்கும் கைதி 2 படத்தின் பேன் மேட் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் நடித்து வர, நடிகர் கார்த்தி சர்தார் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram