Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

யாஷிகாவை பற்றி கேள்வி கேட்டு நிரூப்பை அதிர வைத்த ரசிகர்.. அப்படி என்ன கேட்டு இருக்கார் பாருங்க

Fan Question To Niroop

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற கடைசி வரை நிகழ்ச்சி பயணித்தவர் நிரூப். இவர் நடிகை யாஷிகாவை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரேக்கப் செய்து கொண்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னதாக ரசிகர்கள் தொடர்ந்து கேட்டதால் லைவ்வில் ரசிகர்களோடு உரையாடியுள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் ஏன் யாஷிகா விவாகரத்து பண்ணிங்க என கேட்க ஒரு நிமிஷம் ஆடிப்போய்விட்டார் நிரூப். விவாகரத்து எல்லாம் பண்ணல எங்க இருவருக்கும் இடையே நிறைய ஹாப்பி மூமண்ட்ஸ் இருக்கிறது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து விட்டோம். ‌‌

இருவருக்கும் இடையே பிரச்சனை வரும்போதும் ஒரு கட்டத்துக்கு மேல் ஒன்று சேர்ந்து இருந்தால் இருவருக்கும் வாழ்க்கை நன்றாக இருக்காது. அப்படி இல்லை என்றால் நம்மை சுற்றி இருப்பவர்கள் நன்றாக இருக்க மாட்டார்கள் அதனால் பிரிந்து விட்டோம் என நிரூப் கூறியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Niroop (@niroopnandakumar)