தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் வலிமை. ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வந்தாலும் இந்த படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் வலிமை படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் அதில் இருக்கும் தவறுகளை வீடியோவை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளார். அஜித் ஜீப்பிலிருந்து இறங்கும் காட்சியில் கதவை திறப்பதற்கு முன்பாகவே கால் வெளியில் தெரிகிறது. இதனைச் சுட்டிக் காட்டிய ரசிகர் எடிட்டர் கூட சரியா வேலை பார்க்கல என கூறியுள்ளார்.
மேலும் இன்னொரு காட்சியில் பிரேமில் மானிட்டர் தெரிகிறது. இதனையும் ரசிகர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
— Tamil saravanan (@tamilsaravanaa) March 12, 2022