ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட்டைக் கேட்டு ரசிகர்கள் செய்து வரும் காரியம் எல்லை மீறி சென்றது. அதுமட்டுமின்றி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருச்செந்தூர் முருகன், பிரதமர் மோடி என பலரிடமும் வலிமை அப்டேட் கேட்டு வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகியது.
குறிப்பாக பிரதமர் மோடியின் சென்னை வருகையின் போது ரசிகர்கள் செய்த காரியம் அஜித்தை வேதனை அடையச் செய்துள்ளது. இதனால் அஜித் தங்களுடைய ரசிகர்களை பொது இடத்தில் கண்ணியத்தை கடைபிடிக்கும் படி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் அஜித்தின் இந்த அறிக்கைக்கு பல்வேறு ரசிகர்களும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வந்த நிலையில், “உங்களது வார்த்தைக்கு கட்டுப்படுகிறோம்” என அஜித்தின் அறிக்கையுடன் கூடிய போஸ்டர் ஒன்றை அடித்து, வெளியிட்டுள்ளனர் மதுரை ரசிகர்கள். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.