Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தீ தளபதி பாடலில் உங்களுக்கு பிடித்த வரி எது? ரசிகர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் கேட்ட கேள்வி

fans-answered-the-question-about-thee-thalapathy

ரசிகர்களால் அன்போடு தளபதி என்று அழைக்கப்பட்டு வரும் தளபதி விஜய் அவர்கள் வம்சி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகியுள்ளது.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ வழங்க இருக்கும் இப்படத்தில் தமன் இசையில் சிம்பு பாடி இருக்கும் இரண்டாவது சிங்கிள் பாடலான “தீ தளபதி” பாடல் நேற்று முன்தினம் வெளியானது. இப்பாடல் தற்போது வரை மில்லியன் கணக்கில் பார்வையாளர்களைக் கடந்து இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் ‘தீ தளபதி’ பாடலில் உங்களுக்கு பிடித்த வரி எது? என்ற கேள்வியை ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் எழுப்பியுள்ளது. இதற்கு தளபதி ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த வரிகளின் புகைப்படங்களை ரீட்வீட் செய்து தங்களது பதிவுகளை குவித்து வருகின்றனர். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.