தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். அஜித் நடிப்பில் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு வெளியிட்ட திரைப்படங்கள் பொங்கல் விருந்தாக இன்று வெளியாகி உள்ளது.
துணிவு திரைப்படம் பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு ஒரு மணிக்கு வெளியான நிலையில் வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு வெளியானது. இந்த நிலையில் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் படம் பார்க்க சென்ற ரசிகர்கள் முந்தியடித்துக் கொண்டு கதவை உடைத்து உள்ளே புகுந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.
துணிவு அல்லது வாரிசு படத்திற்கு இப்படி நடந்ததா என்பது குறித்த தகவல்கள் தெளிவாக கிடைக்கப்பெறவில்லை. இருந்த போதிலும் ரசிகர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்த இந்த வீடியோ பேசுபொருளாக மாறி உள்ளது.
😳 @RohiniSilverScr pic.twitter.com/Vr1q8hfBO7
— Karthik Ravivarma (@Karthikravivarm) January 10, 2023