Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸில் அசல் கோளாறு லீலை.. ஆதாரத்துடன் கலாய்க்கும் நெட்டிசன்கள்

fans blast asal kolar in bigg boss 6 tamil

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. வீட்டின் முதல் வார தலைவராக ஜி பி முத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆரம்பம் முதலில் நிகழ்ச்சி படு விறுவிறுப்பாக சென்று வரும் நிலையில் சர்ச்சைகளும் பஞ்சம் இல்லாமல் எழுந்து வருகிறது. அதாவது சக போட்டியாளர்களில் ஒருவரான அசல் கோளாறு பெண்களிடம் பேசும்போது தனக்கு கேர்ள் பிரண்ட் இல்லை பெண் தோழிகள் இல்லை என அப்பாவி போல பேசி அவர்களை தொட்டு தடவும் காட்சிகள் மக்கள் மத்தியில் எரிச்சலை உண்டு பண்ணி உள்ளன.

நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் இது குறித்த போட்டோக்களை வெளியிட்டு அவரை கண்டமேனிக்கு திட்டி வருகின்றனர்.