தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் லட்சுமிக்கு அப்பா பாரதிதான் என தெரிந்த போதிலும் அது பற்றி மேலும் கதை நகரவில்லை. பாரதிக்கு டிஎன்ஏ சோதனை நடக்கும் வேலை நடக்கவில்லை. இப்படி கதைக்க சம்பந்தமான எந்த விஷயமும் இல்லாமல் வேறு வேறு விஷயங்களால் கதையை ஓட்டி வருகிறார் இயக்குனர்.
அந்த வகையில் தற்போது பாரதியும் கண்ணம்மாவும் மருத்துவமனையை சந்தித்துக் கொள்வது போலவும் வெண்பாவிற்கு பதில் மருத்துவமனையில் வேறு ஒரு வில்லனை உருவாக்கியுள்ளார் இயக்குனர். சென்னையில் ஒரு நாள் படத்தின் கதையை அப்படியே காப்பி அடித்து சக்தி என்ற குழந்தைக்கு மாற்றியதே என்பதை தெரிந்து கொண்ட காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.
இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் சீரியல் கதைக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களை எல்லாம் இப்படி கொண்டு வரிங்க, ஒன்றுமே இல்லாமல் சீரியலை ஜவ்வு போல் இழுப்பதாக பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.
பாரதிக்கு எப்போது தான் லட்சுமி, ஹேமா என இரண்டும் தன்னுடைய குழந்தைகள் என்ற உண்மை தெரியும்? 10 வருஷத்துக்குள்ள உண்மையை தெரிய வச்சிடுவீங்களா என கிண்டலடித்து வருகின்றனர்.