தமிழ் சின்னத்திரையில் சன் டிவிக்கு அடுத்தபடியாக சீரியலுக்கு பெயர் போன தொலைக்காட்சி சேனலாக இருந்து வருகிறது விஜய் டிவி. இது சீரியலில் ஒளிபரப்பாகி வரும் சின்னத்திரை நல்ல வரவேற்பை பெற்றாலும் சில சீரியல்கள் அதிக அளவில் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகின்றது.
இந்த நிலையில் எல்லை மீறிய படுக்கை அறை காட்சிகளால் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது பிரபல சீரியல் ஒன்று. விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் ஜேகே மற்றும் ரம்யாவுக்கு சமீபத்தில் கல்யாணம் நடந்த நிலையில் இருவருக்கும் ஆன முதல் இரவு காட்சிகள் எல்லை மீறி உள்ளது.
திரைப்படங்களுக்கு இணையாக ஓவர் ரொமான்டிக்காக இடம் பெற்ற இந்த காட்சிகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை பார்க்கும் தொலைக்காட்சி சிறியங்களில் கூட இப்படியா பண்ணுவீங்க என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.