Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் ரசிகர்கள் வெளியிட்ட வீடியோ. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

fans-making-video-for-ponniyin-selvan-2 movie

தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் சுபாஷ் கரனின் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், விக்ரம் பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி என பலரது நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இந்த படத்தின் முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தில் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ‌‌PS 2 வை வரவேற்கும் விதமாக ரசிகர்கள் YOUTUBE இல் ஒரு பாடலை வெளியிட்டு கொண்டாடுகிறார்கள்.

YouTube பிரபலங்கள் மற்றும் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் வீடியோ செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறார்கள். இது சமூக வலைதளங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பற்றி பேசும் பொருளாக மாறி உள்ளது.

மேலும் இந்தியாவிலேயே முதல் முறையாக PS 2 திரைப்படம் 4DX தொழில்நுட்பத்துடன் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.