Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரியா வாரியருக்கு ரசிகர்கள் ஆபாச கோரிக்கை

Fans porn demand for Priya Varrier

சமூகவலைதளங்களால் பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுடன் எளிதாக தொடர்பில் இருக்க முடிகிறது. ஆனால் சில நெகட்டிவான மனிதர்களின் வக்கிரமான செயல்களையும் இதில் தவிர்க்க முடிவதில்லை. இளம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், ‘ஓரு அதார் லவ்’ படத்தின் ‘மாணிக்க மலராய பூவி’ என்ற பாடலில் கண் சிமிட்டியதால், 2018-ஆம் ஆண்டில் இணையத்தில் வைரலானார்.

பின்னர் அவர் இந்திய அளவில் கவனிக்கப்பட்டார். அதோடு ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். சமூக ஊடகங்களில் தீவிரமாக உள்ள பிரியா, ‘ஹேப்பி நியூ இயர்’ என்ற படத்தில் இடம் பெற்றுள்ள ‘மான்வா லாகே’ பாடலுக்கு உதட்டை அசைத்து வீடியோ ஒன்றை பதிவேற்றியிருந்தார்.

இதற்கு பிரியாவின் நண்பரும், இணைய பிரபலமுமான ஷரன் நாயர், “உங்கள் உதட்டை எப்படி கடிக்க வேண்டும் என்று எனக்குக் கற்றுக் கொடுங்கள்” என்று கேட்டிருந்தார். எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருபத்தி இரண்டு வயதான நடிகை பிரியா, “ஹ்ம்ம்ம்ம் நான் செய்வேன்” என்று பதிலளித்திருந்தார். இப்போது தங்களுக்கும் அதை கற்பிக்க வேண்டுமென, மற்றவர்களும் பிரியாவுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.