Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“என்ன கேள்வி கேட்கணும் என ஹோம் ஒர்க் பண்ணிட்டு வாங்க”: கமல்ஹாசனுக்கு தொடரும் விமர்சனம்

fans-question-to bb kamalhaasan

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த வாரம் சனிக்கிழமை நிக்சன் குறித்து தினேஷ் தௌளத்தா பேசுறியா என்று கேட்ட விஷயம் ட்ரூ கலர் என மணி சொன்ன விஷயம் போன்ற விஷயங்களை ஒருத்தரு பிராண்டு குத்த நீங்க யாரு என்று கமல் கடுமையாக கண்டித்திருந்தார்.

அதேபோல் அர்ச்சனா வினுஷா பற்றி பேசியதற்கும் கமல் இல்லாதவங்களை பற்றி எதுக்கு பேசணும் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதையெல்லாம் நீங்கள் கேட்க வேண்டிய நேரத்தில் கேட்டிருந்தால் இன்று திரும்பவும் இவை நடந்திருக்காது என ரசிகர்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசிய நீங்கள் வினுஷா பற்றி நிக்சன் பேசிய அன்று கேள்வியை கேட்டிருந்தால் திரும்பவும் வினுஷா குறித்த பேச்சு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்காது என கூறி வருகின்றனர்.

அதேபோல் ட்ரூ கலர் என மிக்சன் குறித்து விசித்ரா யுகேந்திரனிடம் பேசிய போதே அதை கண்டித்து இருந்தால் இன்று திரும்பவும் அந்த விஷயம் பேசப்பட்டு இருக்காது. முதலில் எபிசோடுகளை நீங்க பார்த்து என்ன கேள்வி கேட்கணும் என ஹோம் ஒர்க் பண்ணிட்டு வாங்க என்று கூறி வருகின்றனர்.

fans-question-to bb kamalhaasan
fans-question-to bb kamalhaasan