Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜயின் ரீசன்ட் புகைப்படத்தை பார்த்து கடுப்பான ரசிகர்கள். வைரலாகும் பதிவு

fans reaction on thalapathy vijay in latest selfie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் தளபதி விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. இந்த படத்தில் விஜய் தாடி மீசை இல்லாமல் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

மேலும் கமெண்ட்டுகளில் எவன்டா அந்த ஹேர் ஸ்டைல் என்றெல்லாம் கேள்வி கேட்டு வருகின்றனர். விஜய் உடைய ஹேர் ஸ்டைல் வேற மாதிரி இருந்திருக்கலாம் என கூறி வருகின்றனர்.