Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அல்லு அர்ஜுனுக்கு ரசிகர் வைத்த கோரிக்கை. என்ன தெரியுமா?

fans request to allu arjun about maayon movie

தமிழ் சினிமாவில் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் டபுள் மீனிங்க் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் திரைக்கதையில் கிஷோர் இயக்கத்தில் சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன், உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து திரையரங்குகளில் வெளியாக்கிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் மாயோன்.

முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக இந்த படத்தின் OTT ரிலீஸ்க்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாக நிறைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருந்த போதிலும் பட குழு தற்போது வரை இந்த படத்தின் OTT உரிமையை யாருக்கும் விற்பனை செய்யாமல் இருந்து வருகிறது.

இப்படியான நிலையில் ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அல்லு அர்ஜுனுக்கு டேக் செய்து உங்களது ஆகா தமிழ் இணையதள பக்கத்தில் இந்த படத்தை வாங்கி வெளியிடுங்கள். மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் படம் இது என தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சார்பாக இதை நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் எனவும் பதிவு செய்துள்ளார்.

இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதே சமயம் மறுபக்கம் மாயோன் படத்தின் OTT உரிமையை கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.