Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாரதிகண்ணம்மா வெண்பாவிடம் ரசிகர் கேட்ட கேள்வி.. பதிலடி கொடுத்த வெண்பா

Fans Scold to Bharathi Kannamma Serial Fareena

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருபவர் பரீனா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

மேலும் தற்போது புதிய சீரியல் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவருக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதங்களே ஆகும் நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பாடலுக்கு ரீல் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் உங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை உங்கள் குழந்தையோடு செலவிடுங்கள் என கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கு என்னைப் பற்றி நீங்கள் கவலைப்படுவதை விடுங்க.. அவள் எப்போதும் என்னுடன் தான் இருக்கிறான் என பதிலடி கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த இன்னொரு ரசிகர் பரினா சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் மோசமான பெண் தான் போல.

அவருக்கு அறிவுரை சொல்வதை விடுத்து விட்டு அவரை பிளாக் செய்து விட்டு சென்று உங்களது வேலையை பாருங்க. அவர் எந்த ரசிகர்களையும் மதித்து நல்லபடியாக பதில் தெரிவிப்பதில்லை என திட்டி தீர்த்துள்ளார்.

Fans Scold to Bharathi Kannamma Serial Fareena
Fans Scold to Bharathi Kannamma Serial Fareena