Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மூன்று நாட்களாக அஜித்தை தேடி அலைந்து கண்டுபிடித்த ரசிகர்கள்.. ரசிகர்களை கலாய்த்த அஜித்

fans-shared-a-video-of-ajith-kumar

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் தற்பொழுது இயக்குனர் வினோத் இயக்கிக் கொண்டிருக்கும் ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்ததை தொடர்ந்து அடுத்ததாக பாங்காங்கில் நடக்க உள்ளது. இதற்கிடையில் தற்பொழுது பிரேக் எடுத்து இருக்கும் தல அஜித் குமார் ஒரு சின்ன பைக் ட்ரிப் சென்றுள்ளார்.

அவருடன் இணைந்து அவரது நண்பர்கள் மற்றும் இப்படத்தின் கதாநாயகியான மஞ்சு வாரியரும் அந்த ட்ரிப்பில் கலந்து கொண்டுள்ளனர். இவர்களின் இந்த ட்ரிப் பயணத்தின் புகைப்படங்கள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில் தற்பொழுது தல அஜித் குமாரின் ட்ரிப் பயணத்தின் புதிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது அந்த வீடியோவில், அஜித்தைத் தேடி சில ரசிகர்கள் சென்றுள்ளனர். அப்போது, அவரை பார்த்தவுடன் உங்களை தேடி தான் சார் மூன்று நாட்களாக அலைகிறோம் என ரசிகர்கள் கூற, அதற்கு அஜித் “நான் என்ன கொலைக்காரனா..? கொள்ளைக்காரனா? என்னைத் தேடுகிறீர்கள் என்று நகைச்சுவையாக அவர்களிடம் பேசியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்களை சிரிக்க பின்பு அவர்களிடம் அஜித் பேசுகிறார். இந்த வீடியோ நேற்றிலிருந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.