Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பூஜா ஹெக்டே அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ

Fans Surprise to Actress Pooja Hegde in Airport

புட்ட பொம்மா என்ற பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் வேறு மொழிகளில் சில படங்கள் நடித்துள்ளார். மீண்டும் தமிழில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் பூஜா ஹெக்டே விற்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் காரில் இருந்து இறங்கிய பூஜா ஹெக்டேவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக் கூறும் விதமாக கையில் பேனரை பிடித்துக்கொண்டு சர்ப்ரைஸ் கொடுத்தனர்.

இதனை கண்டு இன்ப அதிர்ச்சியான பூஜா ஹெக்டே ரசிகர்களுக்கு கைகொடுத்து தனது நன்றியை கூறிவிட்டு விமான நிலையத்திற்குள் சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.