Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தி கிரேட் மேன் படம் எப்படி இருக்கு?ரசிகர்களின் கருத்து

fans-talk-about-actor-dhanush Movie

நடிகர் தனுஷ் ஹாலிவுட் திரைப்படத்தில் களமிறங்கி நடித்து முடித்திருக்கும் படம் தான் தி கிரேட் மேன். இப்படத்தை அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம் கேப்டன், கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ஜோய் ருசோ, ஆண்டனி ருசோ ஆகிய (ருசோ பிரதர்ஸ்) இயக்கியுள்ளனர்.

இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரயன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் இப்படம் நெட் பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அதில் ரசிகர்கள் தனுஷ் காக மட்டுமே இப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம், படம் அருமையாக இருக்கின்றது. தனுஷின் அறிமுகம் மாஸாக இருக்கின்றது. வழக்கம் போல் தனது நடிப்பால் அசத்தியுள்ளார். தனுஷ் நன்றாக நடித்து இருக்கின்றார்.

ஆனால், அவருக்கு குறைவான காட்சிகள் தான் இருக்கின்றது. சில நிமிடங்களில் வந்து செல்கின்றார். ஆனால் படம் பார்ப்பவர்களை தன்னைப் பற்றி பேச வைத்துள்ளார். மேலும் ரூஸோ பிரதர்ஸ் சொன்னபடி அடுத்த திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் முக்கியமானதாக இருக்கும் என நம்புவதாக தெரிவித்து இருக்கின்றனர்.

 fans-talk-about-actor-dhanush Movie

fans-talk-about-actor-dhanush Movie