தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. அதன்பிறகு இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டனர்.
ஏற்கனவே இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில் ஆல்யா மானசா இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்க உள்ளார். இந்த மாதம் அவருக்கு பிரசவம் நடைபெற உள்ளது. இதனால் அவருக்கு வளைகாப்பு நடக்க உள்ளது.
இதே மாதத்தில் தான் இவர்களின் மகள் பிறந்தார். இதனால் இரண்டு ஸ்பெஷல் தினத்தையும் ஒரே நாளில் கொண்டாட திட்டமிட்டு தனது சின்னத்திரை நண்பர்களை அழைத்து வருகிறார் சஞ்சீவ். இதனையறிந்த ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.