பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையான பாத்திமா சனா ஷேக், அமீர்கானின் தங்கல் படம் மூலம் பிரபலமானார். இவர் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அவ்வை சண்முகி படத்தின் இந்தி ரீமேக்கான சாக்சி 420 படத்தில் கமலின் மகளாக நடித்தவர். .
இந்நிலையில், படவாய்ப்புகளுக்காக படுக்கைக்கு வரச் சொல்லி திரையுலகைச் சேர்ந்தவர்கள் தன்னைக் கட்டாயப்படுத்தியதாக பேட்டி ஒன்றில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் அப்பேட்டியில் அவர் கூறியதாவது: “3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன். எப்போதுமே பாதிக்கப்பட்டவர்கள் அது குறித்து பேசுவது இல்லை. ஆனால் தற்போது இந்த உலகம் மாறும் என நம்புகிறேன். பாலியல் சீண்டல்கள் குறித்து தற்போது அதிகம் விழிப்புணர்வு உள்ளது. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு வரச் சொல்லிய பிரச்சனையை நானும் சந்தித்துள்ளேன்.
பாலியல் உறவு வைத்துக் கொண்டால் மட்டுமே பட வாய்ப்பு தருவோம் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். படுக்கைக்கு செல்ல மறுத்ததால் பல முறை பட வாய்ப்புகளை இழந்திருக்கிறேன்.
மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமான பிறகு சிலர் பரிந்துரை செய்ததால் எனக்கு பதில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைத்ததும் நடந்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். பாத்திமா சனா ஷேக்கின் இந்தப் பேட்டி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.