Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘மாஸ்டர்’ படத்தின் ரீமேக் உரிமையை பெற பாலிவுட்டில் கடும் போட்டி

Fierce competition in Bollywood to get the remake rights of ‘Master’ movie

கொரோனா பரவலுக்கு பின் களையிழந்து காணப்பட்ட திரையரங்குகளுக்கு, புத்துயிர் கொடுக்கும் வகையில் பொங்கலுக்கு ரிலீசான படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

வசூலையும் வாரிக் குவித்தது. இப்படம் திரையரங்குகளில் வெளியான 16 நாட்களில் ஓடிடியில் வெளியிடப்பட்ட போதிலும் நிறைய இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடின.

மாஸ்டர் படம் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டாலும், அதனை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதற்கான உரிமையை பெற இந்தி தயாரிப்பாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறதாம். விரைவில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்க மாஸ்டர் படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், கைதி ஆகிய படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது மாஸ்டர் படமும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.