தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஆறு சீசன் ஒளிபரப்பாகி முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.
இதில் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. ஏற்கனவே மாகப ஆனந்த் உட்பட சிலருடைய பெயர்கள் இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது முதல் போட்டியாளர் இவர்தான் என தகவல் ஒன்று பரவி வருகிறது.
அவர் வேறு யாருமில்லை கோயம்புத்தூரை சேர்ந்த பெண் டிரைவர் தான் என சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னால் இவர் குறித்து பரபரப்பாக செய்திகள் வெளியான நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவரை நேரில் சந்தித்து கார் வாங்கிக் கொள்ள 10 லட்சம் ரூபாய் வழங்கினார்.
இந்த சந்திப்பின் போது ஷர்மிளாவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் முதல் போட்டியாளராக சர்மிளா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.