Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் சீரியல் நடிகை. வைரலாகும் தகவல்

first contestant in cwc season 4 update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே டஃப் கொடுக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.

இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ வீடியோ வெளியானது. இந்த வீடியோவில் கோமாளிகளாக பங்கேற்க போவது யார் என்பது குறித்த விவரங்கள் மட்டுமே வெளியாகி இருந்தன.

இப்படியான நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக விஜய் டிவி சார்ந்த மௌன ராகம் 2 நாயகி ரவீனா தாகூர் பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இவர் தான் இந்த சீசனின் முதல் போட்டியாளராக இருப்பாரோ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 முடிவடைந்ததும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கும் எனவும் யார் யார் போட்டியாளர்கள் என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

first contestant in cwc season 4 update
first contestant in cwc season 4 update