தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
சூரரைப் போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து சூர்யாவிற்கு எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படம் முதல்நாளில் தமிழகம் முழுவதும் ரூபாய் 15.21 கோடி வசூல் செய்திருந்தது.
இந்த நிலையில் தற்போது சென்னையில் மட்டும் இந்த திரைப்படம் முதல்நாளில் ரூ 62 லட்சம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.