Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ

first day collection about thiruchitrambalam movie

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி, சங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு அனிருத் தனுஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், மாறன், அத்ராங்கி ரே, தி கிரே மேன் ஆகிய நான்கு படங்கள் ஒ,டி,டி தளங்களில் வெளியானதால் தனுஷ் ரசிகர்கள் மன வருத்தத்தில் இருந்தனர். ஆனால் தற்பொழுது தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்கில் வெளியானதை மகிழ்ச்சியோடு பிளக்ஸ், பேனர்கள் போன்றவற்றை வைத்து ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் முதல் நாள் வசூல் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் இப்படம் முதல் நாளில் மட்டும் 7.4 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களின் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இப்படத்தின் வசூல் இனிவரும் நாட்களில் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  first day collection about thiruchitrambalam movie

first day collection about thiruchitrambalam movie