தமிழ் சினிமாவில் பிரபல முன்னனி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பீஸ்ட் என்ற திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகிறது.
விஜயுடன் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை கோலமாவு கோகிலா டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் இயக்கி உள்ளார். மேலும் அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்த படம் முதல்நாளே பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி வசூலை நெருங்கும் அல்லது 100 கோடியை தாண்டி வசூல் செய்யும் என கணிப்புகள் வெளியாகியுள்ளன. மேலும் எந்தெந்த இடத்தில் எவ்வளவு வசூல் செய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
அது குறித்த முழு விவரம் இதோ உங்களுக்காக
1. தமிழ்நாடு – ரூ 37 கோடிகள்
2. கேரளா – ரூ 7.6 கோடிகள்ஆந்திரா / தெலுங்கானா – ரூ 10 கோடிகள்
3. கர்நாடகா – ரூ 8 கோடிகள்
4. மற்ற மாநிலங்கள் – ரூ 4 கோடிகள்
5. ஓவர்சீஸ் நாடுகள் – ரூ 32 கோடிகள்
