Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வலிமை படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா? வைரலாகும் தகவல்

First Day Collection Analysis of Valimai Movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு இவரது நடிப்பில் உருவாகியுள்ள வலிமைக் திரைப்படம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடா, மலையாளம் என மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

படத்தின் டிக்கெட் புக்கிங் பல்வேறு இடங்களில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல்நாள் தமிழகத்தில் வசூல் ரூபாய் 30 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் யூகித்து உள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் இந்த படம் ஆயிரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மற்ற மாநிலங்களிலும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்படுவதால் படத்தின் வசூல் பெரிய அளவில் இருக்கும் என கூறுகின்றனர்.

 First Day Collection Analysis of Valimai Movie

First Day Collection Analysis of Valimai Movie