தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு படங்களாவது ரிலீசாகி வருகிறது. பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும்தான் சோலோவாக வெளியாகின்றன.
அப்படி வெளியாகும் படங்கள் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்கின்றன என்பது குறித்தெல்லாம் ரசிகர்கள் கவனிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
அதேபோல் ஒவ்வொரு ஏரியாவிலும் ஒரு படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதும் கவனிக்கத்தக்க விசயங்களாக இருந்து வருகின்றன. அந்த வகையில் திருச்சியில் இந்தியாவில் இதுவரை முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
#Valimai – 55.3L
#Beast – 41L
#Don – 30.8L
#RRR – 30.5L
#ET – 20.1L
#KGFChapter2 – 17.2L
#KRK – 15.2L
