தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் வலிமை. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் அஜித் 61 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்திற்குப் பிறகு அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள 62 ஆவது படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கும் வேலைகளில் விக்னேஷ் சிவன் பிசியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் படத்தின் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வைக்க சமந்தாவை டிக்கடித்துள்ளார் விக்னேஷ் சிவன். இதனால் கடுப்பான நயன்தாரா நான் இருக்கும் போது சமந்தா எதுக்கு என இருவருக்கும் இடையே பிரச்சனை உண்டாகி இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
நயன்தாராவின் ஆல் டைம் ஃபேவரைட் நடிகர் அஜித் என்பதால் இந்த பிரச்சனை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் உண்மை என்ன என்பது விக்னேஷ் சிவன், நயன்தாரா வாய் திறந்தால் தான் தெரிய வரும்.
