தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இவர் இன்று மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார்.
இறுதியாக இவரது நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியான நிலையில் அடுத்து பத்து தல என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான போப்டா தனஞ்செயன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் சென்சார் காப்பியை பார்த்து விட்டு பதிவு செய்துள்ளார்.
அவரது பதிவில் I Loved பத்து தல, சென்சார் காப்பியை பார்த்து விட்டேன், பக்கா என்டர்டெயின்மெண்ட் திரைப்படம், மேக்கிங் அருமையாக உள்ளது என பாராட்ட தள்ளியுள்ளார். இவரது இந்த பதிவு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
