தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி நானே வருவேன் திரைப்படம் வெளியாக உள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தற்போது சென்சார் போர்டில் பணியாற்றி வரும் உமர் சந்து என்பவர் இந்த படத்தின் முதல் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். 2022-ன் பெஸ்ட் திரில்லர் திரைப்படமாக இது இருக்கும் என கூறியுள்ளார். மேலும் தனுஷ் மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார்.
செல்வராகவன் கதாபாத்திரம் செம சர்ப்ரைஸ் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஐந்துக்கு மூன்றரை ரேட்டிங் கொடுத்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
First Review #NaaneVaruvean ! One of the Best Thriller of 2022 ! Engaging Story & Screenplay ! @dhanushkraja Stole the Show all the way. He is in Terrific form. #Selvaraghavan totally Surprised! Climax will blow your mind! Go for it !
⭐️⭐️⭐️1/2
— Umair Sandhu (@UmairSandu) September 27, 2022