சருமம் அழகாக இருக்க நாம் என்னென்ன பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.
பொதுவாகவே நாம் சரும ஆரோக்கியத்திற்கு பல ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துகிறோம். ஆனால் இயற்கை முறையில் பயன்படுத்துவதே நம் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. அப்படி இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து சருமம் பொலிவாக வைப்பது எப்படி என்று பார்க்கலாம்.
முதலில் வறண்ட சருமம் உள்ளவர்கள் பயன்படுத்த வேண்டியது தேங்காய் எண்ணெய்.
ஏனெனில் இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு அதிகம் உள்ளதால் முகத்தில் இருக்கும் பாக்டீரியாக்களை நீக்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்.
இரண்டாவதாக பயன்படுத்த வேண்டியது தேன். தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்பு அதிகமாக இருப்பதால் சருமத்தில் இருக்கும் கறைகளை அகற்றி ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
மூன்றாவதாக மிக முக்கியமாக இருப்பது கற்றாழை. ஏனெனில் கற்றாழை ஜெல் முகத்திற்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும். அதில் இருக்கும் சதைப்பகுதியை எடுத்து முகத்தில் தடவி வந்தால் ஈரப்பதம் பராமரிக்கப்பட்டு சேதம் அடைந்த சருமத்தை பாதுகாத்து சரி செய்யும். மேலும் கற்றாழையை அனைத்து வகையான சருமத்தினரும் பயன்படுத்தலாம்.
நான்காவதாக பன்னீர். வறண்ட சருமம் உடையவர்கள் பன்னீரை இரவில் தடவி வர வேண்டும். அப்படி தொடர்ந்து தடவி வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.
ஐந்தாவதாக நாம் பயன்படுத்த வேண்டிய பழம் அவக்கோடா. அவக்கோடா பழத்தை நன்றாக அரைத்து தொடர்ந்து சருமத்தில் தடவி வந்தால் ஆரோக்கியம் கிடைக்கும். சரும பிரச்சனை இருப்பவர்களுக்கு சிறந்த பழமாக இருக்கிறது.