முள்ளங்கியுடன் சேர்த்து எந்தெந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.
ஆரோக்கியம் தரும் காய்கறிகளில் முக்கியமான ஒன்று முள்ளங்கி. இது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை, மற்றும் காய்ச்சல், பசியின்மை போன்ற பிரச்சனைகளுக்கு முள்ளங்கி ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது. வைட்டமின் சி நிறைந்திருப்பதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும். ஆனால் இதனுடன் சேர்த்து சில உணவுகள் சாப்பிட்டால் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் அதனை குறித்து பார்க்கலாம்.
முதலாவதாக முள்ளங்கியுடன் பாகற்காய் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் இது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை வர காரணமாக அமைந்துவிடும்.
முள்ளங்கி சாப்பிட்ட பிறகு டீ குடிக்கக் கூடாது. அப்படி செய்தால் செரிமான அமைப்பு பாதிக்கும். முள்ளங்கி சாப்பிட்ட பிறகு ஆரஞ்சு ஜூஸ் குடிக்க கூடாது. அது உடலுக்கு நோய் வர காரணமாக இருக்கும்.
குறிப்பாக முள்ளங்கி உடன் மீனை சேர்த்து சாப்பிடக்கூடாது ஏனென்றால் தசை பிடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே முள்ளங்கி ஆரோக்கியம் நிறைந்ததாகவே இருந்தாலும் அதனுடன் சேர்த்து சில உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.