முக்கனிகளில் ஒன்றாக இருப்பது பலா. இந்த பழத்தை பிடிக்காதவர்கள் என்பது யாரும் கிடையாது. இந்த பழத்தை சாப்பிட்ட பிறகு நாம் எடுத்துக் கொள்ளக் கூடாத உணவுகள் என்னவென்று விரிவாகப் பார்ப்போம்.
முதலில் பலாப்பழம் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் தோல் சம்பந்தப்பட்ட மற்றும் அலர்ஜி பிரச்சனை வரக்கூடும்.
இரண்டாவதாக பப்பாளி பழம் சாப்பிட்டால் உடலில் அழற்சியை ஏற்படுத்தும். இதனைத் தொடர்ந்து வெண்டைக்காய் பலாப்பழம் சாப்பிட்ட பிறகு சாப்பிட்டால் தோலில் வெண் திட்டுகள் ஏற்படக்கூடும்.
இதுமட்டுமில்லாமல் பலாப் பழத்தை அதிகமாக உட்கொண்டால் ஏற்படும் பிரச்சனையை குறித்தும் பார்க்கலாம்.
பலாப்பழம் அதிகமாக சாப்பிடுவதால் வயிறு மந்தம் வாந்தி மற்றும் மலச்சிக்கல் புளியேப்பம் வயிற்றுவலி போன்றவை உண்டாகும்.