மாரடைப்பு ஏற்படுவதை நமது உணவு பழக்க வழக்கங்களை கொண்டு தடுக்க முடியும்.
இன்றைய மனிதர்களின் உடல்களில் ஏற்படும் பல பிரச்சனைகளில் ஒன்றாக இருந்து வருவது மாரடைப்பு. இதயத்தில் ரத்த ஓட்டம் நிறுத்தப்படும் போதும் கொழுப்புப் படிவதன் மூலமாகவும் மாரடைப்பு வர முக்கிய காரணமாக இருக்கிறது.
இதை நாம் உண்ணும் உணவின் மூலம் எப்படி தவிர்க்க வேண்டும் என்று பார்க்கலாம்..
பொதுவாக இதய நோய் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரும் நோய் ஆகி உள்ளது. இதய நோய் உள்ளவர்கள் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் இறைச்சி அதிகமாக உட்கொள்வதை நிறுத்த வேண்டும்.
இறைச்சி உட்கொள்வதால் கொழுப்பின் அளவும் கெட்ட கொலஸ்ட்ராலும் அதிகமாக்கி மாரடைப்பை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது.
மேலும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் அதிகம் உட்கொள்ளும் போது கொழுப்பு உடலில் அதிகம் தங்கி விடுகிறது. இதனால் பல பிரச்சனைகள் உண்டாகலாம். மேலும் மைதா கலந்த உணவுகளை சேர்க்காமல் இருப்பது மிகவும் நல்லது.
மைதா சேர்ப்பதே மாரடைப்பின் அபாயத்தை அதிகரிக்கச் செய்யும்.
இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடாமல் நம் உடலுக்குத் தீங்கு செய்யும் எந்தவித பொருட்களையும் உண்ணாமல் தடுப்பதன் மூலம் மாரடைப்பு அபாயத்தை பன்மடங்கு குறைக்க இது வழிவகுக்கும்.