50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க.
பொதுவாகவே வயதானவர்களுக்கு புரோட்டின் அதிகமாக தேவைப்படுகிறது. ஒருவரது ஆரோக்கியம் என்பது அவர்களின் உணவு பழக்கத்தில் தான் இருக்கிறது. உணவில் அதிகமான புரோட்டின் அளவை சேர்த்துக் கொண்டால் சிறந்த எனர்ஜி மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுகிறது இது நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
பால் சம்பந்தப்பட்ட உணவுகளை நம் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வது சிறந்ததாக இருக்கும். ஆனால் சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்படும். பால் சம்பந்தப்பட்ட பொருட்களை நாம் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது எலும்புகளுக்கு வலுவை தருகிறது. மேலும் இதில் நார்ச்சத்து கொழுப்புகளை குறைப்பதால் வயதானவர்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
இது மட்டும் இல்லாமல் மாட்டிறைச்சியில் வைட்டமின் பி12 செலினியம் போன்ற புரதம் அதிகம் நிரம்பியுள்ள சத்துக்கள் இருப்பதால் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. ஆனால் அளவுக்கு அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.
குறைவாக சேர்ப்பது சிறந்த பலன் கொடுக்கும்.
இதனைத் தொடர்ந்து மிக முக்கியமாக இருப்பது முட்டை. முட்டையில் இரும்பு சத்து வைட்டமின் பி12 வைட்டமின் டி கோலின் போன்ற சத்துக்கள் நிரம்பி இருப்பதால் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. பீன்ஸ் மற்றும் பருப்பு வகையில் 20 வகையான அமினோ அமிலங்கள் இருப்பதால் இது புரதம் மட்டுமில்லாமல் நாற் சத்தையும் நிறைவாக்கி உடலில் தங்கி இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.